மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை செய்யப்பட்டார். மாணவி மரணத்திற்கு நீதி கோரியும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாநிலம் முழுவதும் கடந்த 40 நாட்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இடதுசாரி கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், வியாழனன்று மாணவர் மற்றும் வாலிபர் அமைப்புகள் ஹவுரா மற்றும் சீல்டாவில் இருந்து தர்மதாலா நோக்கி கொட்டும் மழையிலும் பேரணியாகச் சென்றனர்.